May 24, 2026
Thisaigal NewsYouTube
ஒரு வாரத்திற்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்
தற்போதைய செய்திகள்

ஒரு வாரத்திற்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்

Share:

அலோர் செட்டார் , ஆகஸ்ட் 20-

34 வயது மனைவியையும் 10 வயது மகளையும் கொலை செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்த 43 வயதான வெளிநாட்டு ஆடவர் ஒருவர் விசாரணைக்காக ஏழு நாள்களுக்குத் தடுப்புக் காவலிடப்பட்டுள்ளார்.

அவரின் தடுப்புக்காவல் இன்று தொடங்கி ஆகஸ்ட் 26-ஆம் தேதி வரை அமல்படுத்தப்படும் என்று அலோர் ஸ்டார் மஜிஸ்ட்ரெட் சிட்டி நோர் ஹஸ்லிசா எம்.டி. அலி உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக, கெடா, அலோர் செட்டார், சுல்தான் அப்துல் ஹலிம் நெடுஞ்சாலையில் உள்ள பராமரிக்கப்படாத கட்டடடம் ஒன்றின் பின்புறக் கால்வாயில் இரு பெண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட தகவலை போலிஸ் உறுதிப்படுத்தியிருந்தது.

அதனை அடுத்து, கடந்த திங்கட்கிழமை, இரவு 9 மணியளவில் புக்கிட் பினாங் உள்ள பள்ளவாசலில் அந்த ஆடவர் கைது செய்யப்பட்டதாக அலோர் செட்டார் போலிஸ் தலைவர் ஏசிபி சிட்டி நோர் சலவதி சாத் கூறியுள்ளார்.

Related News