Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

போதைப்பொருள் கடத்தியதாக ஒன்பது பேர் மீது குற்றச்சாட்டு

Share:

சபா பெர்னம், ஜன.28-

சுமார் ஒரு கோடியே 80 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள Ermin 5 மற்றும் Ekstasi போதைமாத்திரைகளை கடத்தியதாக ஒன்பது ஆடவர்கள், சபா பெர்னம், சுங்கை பெசார் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.

அந்த ஒன்பது ஆடவர்களில் ஒருவர் உள்ளூரைச் சேர்ந்தவர், மற்றவர்கள் தைவான் பிரஜைகள் ஆவர் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

29 க்கும் 49 க்கும் இடைப்பட்ட வயதுடைய இந்த ஒன்பது பேரும், கடந்த ஜனவரி 16 ஆம் தேதி பண்டார் புஞ்சாக் ஆலாம், தாமான் இண்டஸ்திரி அலாம் ஜெயா இரண்டில் 2 இல் 183.7 கிலோ எடை கொண்ட போதைப்பொருளை கடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் தூக்குத் தண்டனை விதிக்க வகை செய்யும் அபாயகர போதைப் பொருள் சட்டம் 39B பிரிவின் கீழ் ஒன்பது பேரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

Related News

தாபுங் ஹாஜி விவகாரத்தில் குற்றம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை: மாமன்னர் அதிரடி உத்தரவு

தாபுங் ஹாஜி விவகாரத்தில் குற்றம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை: மாமன்னர் அதிரடி உத்தரவு

மலாக்கா மாநிலத் தேர்தல்: வேட்பாளர்களை ஆகஸ்ட் 15-ல் அறிவிக்கிறது பெர்சாமா

மலாக்கா மாநிலத் தேர்தல்: வேட்பாளர்களை ஆகஸ்ட் 15-ல் அறிவிக்கிறது பெர்சாமா

பாட்காஸ்ட் நெறியாளர்கள் இருவர் கைது விவகாரத்தில் முழு விளக்கம் வேண்டும் — ஐஜிபிக்கு ஆர்எஸ்என் ராயர் வலியுறுத்தல்

பாட்காஸ்ட் நெறியாளர்கள் இருவர் கைது விவகாரத்தில் முழு விளக்கம் வேண்டும் — ஐஜிபிக்கு ஆர்எஸ்என் ராயர் வலியுறுத்தல்

கெடா ஐசிக்யூஎஸ் வளாகத்தில் கைவிடப்பட்ட பயணப் பெட்டியால் வெடிகுண்டு பீதி

கெடா ஐசிக்யூஎஸ் வளாகத்தில் கைவிடப்பட்ட பயணப் பெட்டியால் வெடிகுண்டு பீதி

சரவாக்கில் மோசமடைந்து வரும் புகைமூட்டம்: 5 மாவட்டங்களில் காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலை

சரவாக்கில் மோசமடைந்து வரும் புகைமூட்டம்: 5 மாவட்டங்களில் காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலை

அலோர் ஸ்டாரில் போலீசாருக்கும் கடத்தல்காரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை: 2 சந்தேக நபர்கள் சுட்டுக்கொலை

அலோர் ஸ்டாரில் போலீசாருக்கும் கடத்தல்காரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை: 2 சந்தேக நபர்கள் சுட்டுக்கொலை