Jul 30, 2026
Thisaigal NewsYouTube
676 சட்டவிரோதக் குடியேறிகள் கைது
தற்போதைய செய்திகள்

676 சட்டவிரோதக் குடியேறிகள் கைது

Share:

கோலசிலாங்கூர்,ஆகஸ்ட் 05-

கோலசிலாங்கூர் வட்டாரத்தில் பெகன் இஜோக் - கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை போலீசார் மேற்கொண்ட தீவிர சோதனை நடவடிக்கையில் 676 சட்டவிரோதக் குடியேறிகள் கைது செய்யப்பட்டனர்.

இந்த சோதனை நடவடிக்கை, மாலை 4.30 மணிக்கு தொடங்கி சுமார் 10 மணி நேரம் நடைபெற்றதாக கோலசிலாங்கூர் மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் முகமது அம்பியா நோர்டின் தெரிவித்தார்.

பிடிபட்ட சட்டவிரோதக்குடியேறிகள் வங்காளதேசம் மற்றும் மியன்மார் நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

30 க்கும் 40 க்கும் இடைப்பட்ட வயதுடைய இந்த சட்டவிரோதக் குடியேறிகளில் 163 பேர், தங்களின் அடையாள அட்டை மற்றும் வேலை பெர்மிட் தொடர்பில் பல்வேறு குற்றங்கள் புரிந்துள்ளதாக முகமது அம்பியா நோர்டின் மேலும் விவரித்தார்.

Ijok வட்டாரத்தில் பொது மக்கள் கொடுத்த தகவல்கள் மற்றும் போலீசாரின் உளவுத் துறை குறிப்புகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த சோதனை நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை