Jul 29, 2026
Thisaigal NewsYouTube
ஹாடி அவாங் தலைராக இருக்கும் வரையில் பாஸ் கட்சியுடன் ஒத்துழைப்பு இல்லை அம்னோ திட்டவட்டம்
தற்போதைய செய்திகள்

ஹாடி அவாங் தலைராக இருக்கும் வரையில் பாஸ் கட்சியுடன் ஒத்துழைப்பு இல்லை அம்னோ திட்டவட்டம்

Share:

கோலா காங்சார், ஜூலை 8-

பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங், தலைவராக இருக்கும் வரையில் அந்த கட்சியுடன் அம்னோ எந்தவொரு ஒட்டுறவையும் கொண்டு இருக்காது என்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி இன்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அந்த மதவாத கட்சித் தலைவர் தலைமையிலான பாஸ்ஸுடன் முன்பு அம்னோ கொண்டிருந்த ஒத்துழைப்பு மற்றும் உறவின் அடிப்படையில் அம்னோ இந்த முடிவை எடுத்துள்ளதாக துணைப்பிரதமருமான அகமட் ஜாஹிட் இதனை குறிப்பிட்டார்.

அம்னோவுக்கும், பாஸ் கட்சிக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் கூட்டு முடிவு எடுக்கப்பட்டன. ஆனால், அந்த கட்சியினால் அதனை நிலைநிறுத்திக்கொள்ள முடியவில்லை என்று அகமட் ஜாஹிட் தெரிவித்தார்.

இன்று இணைக்கம் காணப்பட்ட முடிவை மறுநாளே மாற்றிக்கொள்ளக்கூடிய தலைவராக ஹாடி அவாங் பார்க்கப்படுகிறார். எனவே அந்த கட்சியின் தலைவராக ஹாடி அவாங் இருக்கும் வரையில் கூட்டு ஒத்துழைப்ஙுப என்பது அறவே கிடையாது என்று அகமட் ஜாஹிட் குறிப்பிட்டார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்