சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987-ன் கீழ் நிர்ணயிக்கப்பட்ட வயது குறைந்த ஓட்டுநர்களுக்கு எதிரான அபராதம் குறித்து போக்குவரத்து அமைச்சு மறுஆய்வு செய்யும் என்று அதன் அமைச்சர் லோகே சியூ ஃபூக் கூறினார்.
கூடுதலாக, சட்டத்தின் கீழ் உள்ள அனைத்து பிரிவுகளும் பல்வேறு அம்சங்களில் இருந்து மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும் எனவ்ய்ம் அமைச்சர் குறிப்பிட்டார்.
தற்போதைய சட்டத்தின் கீழ் விதிக்கப்படும் அதிகபட்ச அபராதம் குறித்து தமது தரப்பு அவ்வப்போது மதிப்பாய்வு செய்யும் என அவர் கூறினார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, 16 வயதுடைய ஒருவர் தமது தந்தையின் காரை பினாங்கு பாலத்தில் செலுத்தும்போது விபத்துக்குள்ளாகி இருவர் பலியான சம்பவம் உட்பட பல விபத்துகள் நேர்ந்து இருக்கின்றன.
இவ்வாறான சூழலில், வயது குறைந்த ஓட்டுநர்களின் பெற்றோர்கள் மீதான நடவடிக்கை குறித்து அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, நடப்புச் சட்டத்தைத் தாண்டி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என அவர் பதிலளித்தார்.
சட்டத்தை மேம்படுத்தவும் மறு ஆய்வு செய்யும் முன்னர், பொது மக்கள், அரசு சாரா அமைப்புகள் ஆகியோரின் கருத்துகளைகள் அமைச்சு கேட்டறியும் என்றார் அவர்.








