Jun 29, 2026
Thisaigal NewsYouTube
குரங்குகள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்: அரசுக்கு எதிராக விலங்கு நல ஆர்வலர்கள் மேல்முறையீட்டில் வெற்றி
தற்போதைய செய்திகள்

குரங்குகள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்: அரசுக்கு எதிராக விலங்கு நல ஆர்வலர்கள் மேல்முறையீட்டில் வெற்றி

Share:

புத்ராஜெயா, பிப்ரவரி.26-

போர்ட்டிக்சன் பகுதியில் Dusky Leaf வகை குரங்குகள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு எதிராக விலங்கு நல அமைப்பு மற்றும் ஆர்வலர் தொடர்ந்த வழக்கில் புத்ராஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றம் அவர்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்துள்ளது.

வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறை மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக Hak Asasi Hidupan Liar Malaysia இயக்கத்தினர் மற்றும் விலங்கியல் ஆர்வலர் நூருல் அஸ்ரின் சுல்தான் ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சூ கா சிங் தலைமையிலான மூவர் அடங்கிய நீதிபதிகள் குழு ஏற்றுக் கொண்டது.

குரங்குகள் அச்சுறுத்தலாக இருந்ததால் அவற்றைக் கொன்றது சட்டப்படி நியாயமானது என்று இதற்கு முன்பு உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தவறானது என மேல்முறையீட்டு நீதிமன்றம் சுட்டிக் காட்டியது.

ஒரு குரங்கு அச்சுறுத்தலாக இருந்தாலும்கூட, அந்த முழு கூட்டத்தையுமே அழிப்பது சட்டவிரோதமானது மற்றும் தேவையற்றது என்று நீதிபதி சூ கா சிங் தெரிவித்தார்.

இவ்வழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் வழக்கறிஞர்கள் ராஜேஷ் நாகராஜன் மற்றும் சிம்ரன் கவுர் ஆஜராகினர்.

Related News

ஜோகூர் தேர்தலில் இளம் வாக்காளர்கள் ஆதரவு யாருக்கு? வெற்றியைத் தீர்மானிக்கும் புதிய சக்தி என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து

ஜோகூர் தேர்தலில் இளம் வாக்காளர்கள் ஆதரவு யாருக்கு? வெற்றியைத் தீர்மானிக்கும் புதிய சக்தி என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து

ஜோகூர் மாநிலத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளிலிருந்து 7 புகார்கள் – 3 வழக்குகள் பதிவு

ஜோகூர் மாநிலத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளிலிருந்து 7 புகார்கள் – 3 வழக்குகள் பதிவு

சரவாக் சட்டமன்றத்தில் புதிய 17 தொகுதிகள்: நாடாளுமன்ற ஒப்புதலில் தாமதம் என ஜிபிஎஸ் தலைவர் விமர்சனம்

சரவாக் சட்டமன்றத்தில் புதிய 17 தொகுதிகள்: நாடாளுமன்ற ஒப்புதலில் தாமதம் என ஜிபிஎஸ் தலைவர் விமர்சனம்

தும்பாட்டில் அரிய வகை சிவப்புக் கழுகு உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பறிமுதல்

தும்பாட்டில் அரிய வகை சிவப்புக் கழுகு உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பறிமுதல்

காஜாங்கில் பயங்கரம்: பயணப் பெட்டிக்குள் பெண்ணின் சடலம் மீட்பு

காஜாங்கில் பயங்கரம்: பயணப் பெட்டிக்குள் பெண்ணின் சடலம் மீட்பு

ஷா ஆலமில் போலி விசா தயாரிக்கும் கும்பல் கைது - மூளையாக செயல்பட்ட இந்தியப் பிரஜை சிக்கினார்

ஷா ஆலமில் போலி விசா தயாரிக்கும் கும்பல் கைது - மூளையாக செயல்பட்ட இந்தியப் பிரஜை சிக்கினார்