Oct 9, 2026
Thisaigal NewsYouTube

பல்கலைக்கழக மாணவி படுகொலை: அதிர்ச்சியில் உறவுக்காரர் உயிரிழந்தார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பல்கலைக்கழக மாணவி படுகொலை: அதிர்ச்சியில் உறவுக்காரர் உயிரிழந்தார்

கோலாலம்பூர், ஜூன்.28-

சைபர் ஜெயா பல்கலைக்கழக மாணவி மனிஷாபிரிட் கவுர் படுகொலை தொடர்பில் அவரின் மரணச் செய்தியைக் கேட்டு, அதிர்ச்சிக்குள்ளான தங்களின் மற்றொரு முக்கிய உறவினரும் உயிரிழந்ததாக அந்த மாணவியின் மாமா டத்தோ ராஜ்பால் சிங் தெரிவித்தார்.

மனிஷ்பிரிட் கவுரின் 57 வயதுடைய உறவினர் ஒருவர், அந்த மாணவியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக ஜோகூர் பாருவிலிருந்து கோலாலம்பூருக்கு வந்து கொண்டிருந்த போது அதிகாலை 3 மணியளவில் மூச்சுத் திணறலுக்கு ஆளானதாக டத்தோ ராஜ்பால் சிங் குறிப்பிட்டார்.

மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பு வார்ட்டில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். மனிஷாபிரிட் கவுர், உடல் தகனம் செய்யப்பட்ட கோலாலம்பூர், ஜாலான் லோக் யூ மின்சுடலையில்தான் அவரின் உடலும் நேற்று வெள்ளிக்கிழமை தகனம் செய்யப்பட்டதாக டத்தோ ராஜ்பால் சிங் தெரிவித்தார்.

தற்போது, தாங்கள் இரண்டு முக்கிய உறவினர்களை இழந்து, குடும்பமே சோகத்தில் மூழ்கியிருப்பதாக அவர் மேலும் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
பல்கலைக்கழக மாணவி படுகொலை: அதிர்ச்சியில் உறவுக்காரர் உயிர... | Thisaigal News