Sep 27, 2026
Thisaigal NewsYouTube
படகுப் போக்குவரத்துக்கு எரிபொருள் கூடுதல் கட்டணம்: ஏப்ரல் 20 முதல் அமல்
தற்போதைய செய்திகள்

படகுப் போக்குவரத்துக்கு எரிபொருள் கூடுதல் கட்டணம்: ஏப்ரல் 20 முதல் அமல்

Share:

மத்திய கிழக்கு நாடுகளின் போர் சூழலால் உலகளாவிய எண்ணெய் விலை அதிகரித்துள்ள நிலையில், வரும் ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் பெர்ரி போக்குவரத்து சேவைகளுக்கு எரிபொருள் கூடுதல் கட்டணத்தை விதிக்க போக்குவரத்து அமைச்சு முடிவு செய்துள்ளது.

சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுப் பயனர்களுக்கு மட்டுமே இந்தக் கூடுதல் கட்டணம் விதிக்கப்படும். உள்ளூர் வாசிகள் மற்றும் தினசரி வேலைக்குச் செல்பவர்களுக்கு இந்தக் கூடுதல் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஒரு லிட்டர் எரிபொருள் விலை 4 ரிங்கிட்டிற்கு மேல் உயரும் போது, 5 விழுக்காடு முதல் அதிகபட்சமாக 18 விழுக்காடு வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.

இது பெர்ரி சேவை நிறுவனங்களின் லாபத்திற்காக அல்லாமல், எரிபொருள் விலை உயர்வால் சேவைகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யவே அமல்படுத்தப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் உலகளாவிய எண்ணெய் விலையின் சராசரிக்கு ஏற்ப இந்தக் கூடுதல் கட்டண விகிதம் மாற்றியமைக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

Related News

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்