சுபாங் ஜெயா, செப்டம்பர்.15-
கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி சுபாங் ஜெயா, USJ 2/1 என்ற முகவரியில் உள்ள ஒரு வீட்டின் பிரதான வரவேற்பு அறையின் சிலிங் காற்றாடியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட இளம் பெண் மரணம் தொடர்பில் போலீசார் இதுவரை 32 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
இந்தச் சம்பவத்திற்குப் பொறுப்பான நபர்களை அடையாளம் காண்பதில் விசாரணை தொடர்ந்து முழு வீச்சில் நடைபெற்று வருகிறது என்று சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் வான் மாமாட் தெரிவித்தார்.
இதுவரையில் யாரும் கைது செய்யப்படவில்லை. விசாரணைக்கு உதவ இதுவரை 32 பேர்அழைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் விளக்கினார்.








