கோத்தா கினபாலு, டிசம்பர்.19-
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, பதின்ம வயதுடைய பெண்ணை மானபங்கம் செய்த குற்றத்திற்காக சபா அரசியல்வாதி ஒருவருக்கு கோத்தா கினபாலு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று எட்டு மாதச் சிறையும், 5 ஆயிரம் ரிங்கிட் அபராதமும் விதித்தது.
ஸ்டார் கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டவரான 55 வயது பிலிப் அமோங் என்ற அந்த அரசியல்வாதி, தனக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையைச் செலுத்தத் தவறுவாரேயானால் மேலும் 4 மாதச் சிறைத் தண்டனை விதிப்பதாக மாஜிஸ்திரேட் ஸுல் எல்மி யுனுஸ் தெரிவித்தார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி கோத்தா கினாபாலுவில் உள்ள ஆசியா சிட்டி ஹோட்டலில் 18 வயதுக்கும் குறைவான பெண்ணை மானபங்கம் புரிந்ததாக அந்த சபா அரசியல்வாதி மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.








