போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஓர் ஏஜென்சியில் பணியாற்றும் ஊழியர்களின் தவறான நடத்தை தொடர்பில், வெளியிடப்பட்ட ஓர் அறிக்கை குறித்து விளக்கம் பெறுவதற்காக அதன் அமைச்சர் ஆண்டனி லோக், ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். மின் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அசாம் பாக்கியைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குற்றம் இழைத்தவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு எஸ்.பி.ஆர்.எம். வலியுறுத்திய பிறகும், சில அரசு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் சம்பந்தப்பட்ட 500க்கும் மேற்பட்ட முறைகேடுகள் குறித்த புகார்களை அலட்சியப்படுத்தியதாக அசாம் பாக்கி தெரிவித்ததைத் தொடர்ந்து, மேலதிக அறிக்கையைப் பெறுவதற்கு அச்சந்திப்பை மேற்கொள்விருப்பதாக இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஆண்டனி லோக் இதனை தெரிவித்தார்.
ஊழியர்களின் தவறான நடத்தை குறித்து, உறுதியான ஆதாரம் இருந்தால் இவ்விவகாரத்தில் தாம் முழுமையாக ஒத்துழைக்க விருப்பதாக ஆண்டனி லோக் குறிப்பிட்டார்.

தற்போதைய செய்திகள்
ஊழியர்களின் தவறான நடத்தைக் குறித்து அசாம் பாக்கியுடன் போக்குவரத்து அமைச்சர் சந்திப்பு
Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


