Sep 25, 2026
Thisaigal NewsYouTube
18 சிறந்த எஸ்டிபிஎம் மாணவர்களுக்கு அரசுப் பல்கலைக்கழக உபகாரச் சம்பளம் : அமைச்சர் பத்லினா சிடெக் அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

18 சிறந்த எஸ்டிபிஎம் மாணவர்களுக்கு அரசுப் பல்கலைக்கழக உபகாரச் சம்பளம் : அமைச்சர் பத்லினா சிடெக் அறிவிப்பு

Share:

2025-ஆம் ஆண்டுக்கான எஸ்டிபிஎம் தேர்வில் மிகச்சிறந்த தேர்ச்சி பெற்ற 18 மாணவர்களுக்கு, வரலாற்றில் முதல்முறையாக இளங்கலை பட்டப்படிப்பைத் தொடர அரசுப் பல்கலைக்கழக உபகாரச் சம்பளம் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் பத்லினா சிடெக் அறிவித்துள்ளார்.

இன்று எஸ்டிபிஎம் தேர்வு முடிவுகள் வெளியீட்டு நிகழ்விற்கு பிறகு பேசிய அவர், ஆறாம் படிவ மாணவர்களின் கல்விச் சிறப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த புதிய முயற்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

மேலும், ஆறாம் படிவ கல்விச் சூழலை வலுப்படுத்தும் நோக்கில், அலோர் ஸ்டார் மற்றும் கோம்பாக் ஆகிய இடங்களில் புதிய கல்லூரிகள் திறக்கப்பட்டு, படிவம் 6 – க்கான கல்லூரிகளின் எண்ணிக்கை 29 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் 18 கல்லூரிகளில் டிஜிட்டல் கல்விக்காக 'ஸ்மார்ட் போர்ட்' வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்பதையும் பத்லினா சிடெக் விளக்கினார்.

Related News