Jul 1, 2026
Thisaigal NewsYouTube
நிகழ்ச்சிகள் காரணமாக ஏப்ரல் 29 முதல் மே 2 வரையில் புக்கிட் பிந்தாங் சாலைகள் மூடல்
தற்போதைய செய்திகள்

நிகழ்ச்சிகள் காரணமாக ஏப்ரல் 29 முதல் மே 2 வரையில் புக்கிட் பிந்தாங் சாலைகள் மூடல்

Share:

வரும் ஏப்ரல் 29-ஆம் தேதி முதல் மே 2-ஆம் தேதி வரையில், உழைப்பாளர் தினக் கொண்டாட்டம் மற்றும் நீர் இசை விழா நடைபெறுவதையொட்டி, ஜாலான் புக்கிட் பிந்தாங் சாலையானது வாகனங்களுக்கு மூடப்படும் என்று மலேசிய சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.

மலேசிய வருகை 2026 முயற்சியின் ஒரு பகுதியாக, புக்கிட் பிந்தாங் பகுதியில் இந்நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

மேலும், ஏப்ரல் 22-ஆம் தேதி முதல் படிப்படியாக புக்கிட் பிந்தாங்-ஐச் சுற்றியுள்ள சாலைகளும் மூடப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,ஜாலான் புக்கிட் பிந்தாங் பகுதியில், வரும் ஏப்ரல் 22 முதல் ஏப்ரல் 28-ஆம் தேதி வரை, வாரநாட்களில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை பகுதி சாலை மூடல் அமலில் இருக்கும்.

வார இறுதி நாட்களில், அதே சாலைகள் நள்ளிரவு 12 மணி முதல் காலை 7 மணி வரையில், முழுமையாக மூடப்படும் என்றும் அந்த அமைப்பு அறிவித்துள்ளது.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை