பட்டர்வொர்த், பிப்ரவரி.15-
பினாங்கு இந்து அறப்பணி முயற்சியில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 1.5 மில்லியன் ரிங்கிட் வழங்கிய மானியத்தினால் 9 மாதக் காலக் கட்டத்தில் 4000 square Feet பட்டவொர்த், செக்ஷன் 4, ஜாலான் தெலாகா ஆயர், லாட் 2236 யில் இரண்டு இன்சினரேட்டர் ( Incinerator ) வசதிகளுடன் புதிய மின் சுடலை அமைக்கப்பட இருப்பதாக இந்து அறப்பணி வாரியத்தின் தலைவரும் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்எஸ்என் ராயர் தெரிவித்தார்.
இத்திட்டம் இந்து சமூகத்தின் இறுதி சடங்குகளை நவீனமாகவும் ஒழுங்குப்படுத்தப்பட்ட முறையில் நடத்துவத்துவத்தற்கு உதவியாக இருக்கும் என்றார். இவ்வட்டார மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப இத்திட்டம் உடனடியாக தொடங்கப்படவுள்ளத்தாக ராயர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், செபராங் பெராய் வடப்பகுதியில் இந்திய சமூகத்திற்காக ஒரு புதிய மின் சுடலை தேவை என்பதை கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது . லிம் குவான் ஏங் உறுதுணைவுடன் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் இத்திட்டம் தொடர்பாக அரசாங்கத்திடம் விண்ணப்பம் செய்யப்பட்டன. அதே சமயத்தில் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் பல ஆய்வுகளைச் செய்தார். ஆரம்பக் காலக்கட்டத்தில் இத்திட்டம் பட்டர்வொர்த் ஜாலான் சீராமில் முன்மொழியப்பட்டது. அதன் பிறகு, பினாங்கு இந்து அறப்பணி வாரியமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து முறையான செயல்திட்டங்கள் வரையப்பட்டன. இறுதியாக, கடந்தாண்டு அக்டம்பர் மாதம் பாகான் டாலாமில் இந்திய மின் சுடலை எழுப்புவத்தற்கு அரசாங்கம் அனுமதி ஒப்பந்தம் வழங்கியது.
தொடர்ந்து, பாகான் டாலாமில் இந்திய மின் சுடலை திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக 1.5 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கிட்டை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வழங்கியதற்கு பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரியம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார் ஆர்எஸ்என் ராயர். இந்தத் திட்டத்தின் கட்டுமான பணிகளை நிர்வகித்து கண்காணிக்க தொழில்முறை ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளன. மின் சுடலை கட்டுமான பணி தொடக்கத்திலிருந்து இறுதி வரை பாதுக்காப்பு தரநிலைகள் மற்றும் சுற்றுச்சூழல் விதிமுறைகளை பின்பற்றி சிறப்பாக செயல்படுத்தப்படும் .
மார்ச் 9 ஆம் திகதி மின் சுடலை கட்டுமான குத்தகையின் டெண்டர் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் முகநூலில் திறக்கப்படவுள்ளன. இந்த டெண்டரிலுள்ள விதிமுறைகளுக்கு உட்பட்ட நிறுவனங்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம் என்றார் ஆர்எஸ்என் ராயர். ஆகவே, மத்திய அரசாங்கமும் பினாங்கு இந்து அறப்பணி வாரியமும் எப்பொழுதும் இந்திய சமூக தேவைகளை பூர்த்திச் செய்வதில் முழு நோக்கமாக இருப்பத்தை இந்த மின் சுடலை கட்டுமானம் உணர்த்துவதாக ஆர்எஸ்என் ராயர் குறிப்பிட்டார் .
இறுதியாக, பாகான் டாலாம் மின் சுடலை கட்டுமானம் இவ்வாண்டில் முடிவடைந்து மக்களின் பயன்பாட்டிற்கு அமையும்.








