Oct 1, 2026
Thisaigal NewsYouTube

கோத்தா கெமுனிங் டோல் சாவடியில் லோரி மோதி விபத்து: 7 பேர் காயம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கோத்தா கெமுனிங் டோல் சாவடியில் லோரி மோதி விபத்து: 7 பேர் காயம்

ஷா ஆலாம், டிசம்பர்.11-

கோத்தா கெமுனிங் டோல் சாவடியில் நேற்று இரவு, கட்டுப்பாட்டை இழந்த டிரேய்லர் லாரி ஒன்று, வேகமாக வந்து மோதியதில், அங்கிருந்த இரு கார்கள் பலத்த சேதமடைந்ததோடு, 7 பேர் காயமடைந்தனர்.

நேற்று இரவு 9.17 மணியளவில் நடந்த இச்சம்பவத்தையடுத்து, அங்கு விரைந்த ஷா ஆலம் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அதிகாரிகள், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

டோல் சாவடி ஊழியர் உட்பட 7 பேர், இவ்விபத்தில் காயமடைந்ததாக ஷா ஆலம் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையைச் சேர்ந்த செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்நிலையில், அவர்கள் அனைவரும் உயிருக்கு ஆபத்து ஏதும் இன்றி, நலமுடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →