Oct 9, 2026
Thisaigal NewsYouTube

மகளைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக தாயார் மீது குற்றச்சாட்டு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மகளைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக தாயார் மீது குற்றச்சாட்டு

ஈப்போ, ஜூன்.24-

தனது 21 வயது மகளைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்ததாக மாது ஒருவர், ஈப்போ செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

44 வயதுடைய அந்த மாது கடந்த ஆண்டு செப்டம்பர் 4 ஆம் தேதி முதல் இவ்வாண்டு ஜுன் 7 ஆம் தேதி வரை சித்தியவான், தாமான் செந்தோசா 2இல் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 20 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த மாது குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

நீதிபதி அஸிஸா அஹ்மாட் முன்னிலையில் நிறுத்தப்பட்ட தனித்து வாழும் தாயாரான அந்த மாது, குற்றச்சாட்டை மறுத்து விசாரணைக் கோரியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →