மலேசியாவில் குடிநுழையும் வெளிநாட்டவர்கள் தங்களின் பழக்க வழக்கங்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளுமாறு நெகிரி மாநில மந்திரி பெசார் டத்தோ செரி அமினுடின் ஹாருன் கேட்டுக் கொண்டுள்ளார். குறிப்பாக நிலாய் 3 வில் குடியேறி உள்ள வெளிநாட்டவர்கள் தலைக்கணத்துடனும் மலேசிய சட்டத்திடங்களை மதிக்காமலும் நடந்துக் கொள்ளக் கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், நிலாய் 3 வில், அதிகமான வெளிநாட்டவர்கள் குடியேறும் வட்டாரமாக அது மாறக்கூடாது என்பதில் தான் இனி கவனம் செலுத்த போவதாகவும் அதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகளுடன் கலந்துரையாட இருப்பதாகம் மந்திரி பெசார் தெரிவித்தார்.








