பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்த நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் அழைக்கவுள்ளது. அவ்விவகாரத்தில் மிரட்டலும் கையூட்டும் இருந்ததா என்பது குறித்து விசாரிக்கப்படுவதாக ஆணையத்தின் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ ஆசம் பாக்கி கூறினார்.
தற்போதையச் சூழலில் காவல் துறையின் அறிக்கைக்காக ஆணையம் காத்திருப்பதாகவும் வெளிப்படையான விசாரணை மிக விரையில் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் சொன்னார்.








