Dec 3, 2025
Thisaigal NewsYouTube
புடி95 திட்டம் சுமூகமாக நடைபெறுகிறது
தற்போதைய செய்திகள்

புடி95 திட்டம் சுமூகமாக நடைபெறுகிறது

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.08-

கடந்த செப்டம்ர் 30 ஆம் தேதி அரசாங்கம் அறிமுகப்படுத்திய புடி95 எனும் சலுகை விலையில் ரோன் 95 பெட்ரோல் விற்பனைத் திட்டம், பெரியளவிலான எந்தவோர் இடையுறுமின்றி சுமூகமாக நடைபெற்று வருவதாக உள்நாட்டு வாணிபம், வாழ்க்கைச் செலவின துணை அமைச்சர் ஃபுஸியா சாலே தெரிவித்தார்.

இதுவரையில் மிகச் சிறிய அளவில் 34 புகார்களை மட்டுமே அமைச்சு பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார். புடி95 கட்டமைப்பில் எண்ணெய் நிரப்பப்படும் போது, ஏற்பட்ட இடையூறு தொடர்பில் இந்த புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எனினும் எண்ணெய் நிலையங்களில் இது போன்ற இடையுறுகள் ஏற்படும் பட்சத்தில், முகப்பிடங்களுக்குச் சென்று உதவி கோரலாம் என்று வாகனமோட்டிகளுக்கு அவர் ஆலோசனை கூறினார்.

Related News