நாட்டில் மானிய விலையிலான ரோன்95 பெட்ரோலை வெளிநாட்டு கிரெடிட் மற்றும் டெபிட் அட்டைகளைப் பயன்படுத்தி சுயசேவை நிலையங்களல் வாங்குவதற்கு எதிர்வரும் புதன்கிழமை முதல் தடை விதிக்கப்படுகிறது.
மலேசிய எரிபொருள் நிலைய உரிமையாளர் சங்கத்தின் தலைவர் டத்தோ கைருல் அன்வார் அப்துல் அஜிஸ் கூறுகையில், "இந்த தானியங்கி தடை முறை ஊழியர்களின் பணிச்சுமையைக் குறைப்பதோடு, வெளிநாட்டு வாகனங்கள் மானிய பெட்ரோலை முறைகேடாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும்," என்றார்.
இருப்பினும், வெளிநாட்டு வாகன ஓட்டிகள் உள்நாட்டு வங்கி அட்டைகளை வைத்திருக்க வாய்ப்புள்ளதால், நேரடி கண்காணிப்பு தொடரும் என அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, வெளிநாட்டு கடன் அட்டைகளைப் பயன்படுத்துபவர்கள் இனி எரிபொருள் நிலையத்தின் முகப்பிடங்களில் மட்டுமே பணம் செலுத்த முடியும் என உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.








