குடியுரிமை விவகாரம் குறித்து அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படுமா அல்லது புதிய சட்டம் வரையறுக்கப்படுமா என்பது குறித்து உள்துறை அமைச்சு முடிவு செய்யும் என அமைச்சர் செரி சைஃபுடின் நசுஷ்சோன் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
சட்ட அமலாக்கம், பதிவு செய்தல், சட்டப்பிரிவு 14,15, 16,19 30 ஆகியவற்றின் மூன்று வழிகளின் மூலம் குடியுரிமை பெறுவதற்கான முறைகளை அரசியல் அமைப்புச் சட்டம் தெளிவாகக் குறிப்பிடுகிறது.
அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்ப்டையில் குடியுரிமை பெறுவது குறித்து பல இதர சட்டங்களும் விதிமுறைகளும் நடப்பில் இருக்கின்றன. மூலச் சட்டமான அரசியல் அமைப்புச் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படாவிட்டாலும், இதரத் துணைச் சட்டங்களில் திருத்தம் செய்யப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சைஃபுடின் நசுஷ்சோன் கூறினார்.








