Oct 17, 2026
Thisaigal NewsYouTube

நால்வருக்கு மூன்று ஆண்டு சிறை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நால்வருக்கு மூன்று ஆண்டு சிறை

கிள்ளான், நவ.5-


கடந்த மாதம் கிள்ளானில் 12 வயது சிறுமியை கடத்திய குற்றத்திற்காக இரண்டு பதின்ம வயதுடைய பெண்கள் உட்பட நால்வருக்கு கிள்ளான் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று மூன்று ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.

இந்த நால்வரும் பிடிப்பட்ட தினத்திலிருந்து தண்டனை அமலுக்கு வருவதாக மாஜிஸ்திரேட் சித்தி சுபைடா மஹாட் தெரிவித்தார்.

கடந்த அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் கிள்ளான், பண்டார் புக்கிட் திங்கியில் செல்லத்தக்க பராமரிப்பு உரிமையைப் பெற்று, ஒருவரின் கண்காணிப்பில் இருந்த வந்த 12 வயது சிறுமியை கடத்திச் சென்றதாக அந்த நால்வர் மீதும் குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
நால்வருக்கு மூன்று ஆண்டு சிறை | Thisaigal News