மலாக்கா விவசாய மேம்பாட்டு நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல்முறை அதிகாரி, பொய்யான ஆவணங்களை சமர்ப்பித்து மோசடி செய்ததாக ஆயர்குரோ செஷன்ஸ் நீதிமன்றத்தல் இன்று குற்றஞ்சாட்ப்பட்டார்.
46 வயதான முஹமாட் முஹைமின் லௌ அப்துல்லா என்ற அந்த முன்னாள் தலைமை செயல்முறை அதிகாரி பெம்பங்ஙுனான் பெர்த்தானியான் மலாக்கா எஸ்டிஎன் பிஎச்டி நிறுவனத்தில் தலைமை பொறுப்பை வகித்து வந்த காலகட்டத்தில் போலி பத்திரைகளை சமர்ப்பித்து 56 ஆயிரம் வெள்ளியை மோசடி செய்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








