கோலாலம்பூர், டிசம்பர்.08-
புதிய கணக்குகளைத் திறப்பதற்கான குறைந்தபட்ச வயது வரம்பான 16 ஐ நிறைவு செய்யத் தவறும் சமூக ஊடகச் சேவைத் தளங்களுக்கு 100 மில்லியன் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்று மேலவை உறுப்பினர் செனட்டர் டத்தோ ஶ்ரீ எஸ். வேள்பாரி பரிந்துரை செய்துள்ளார்.
அரசாங்கம் நிர்ணயிக்கக்கூடிய புதிய விதிமுறைக்கு இணங்காத எந்தவொரு நிறுவனத்திற்கும் ஆஸ்திரேலியாவில் 50 மில்லியன் ஆஸ்திரேலிப் பணம் அல்லது 137 மில்லியன் ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படுவதை செனட்டர் டத்தோ ஶ்ரீ வேள்பாரி சுட்டிக் காட்டினார்.
16 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே சமூக ஊடகங்களில் புதிய கணக்கு திறக்க முடியும் என்ற விவகாரத்தில் அரசாங்கம் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேலவையில் டத்தோ ஶ்ரீ வேள்பாரி கேட்டுக் கொண்டார்.








