சிரம்பான், நவம்பர்.13-
தனது சகோதரியின் காதலனை நீண்ட கத்தியினால் தாக்கி, காயம் விளைவித்த குற்றத்திற்காக முடி திருத்தும் பணியாளர் ஒருவருக்கு சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று மூன்று ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.
S. கோகுலன் என்ற அந்த முடித்திருத்தும் பணியாளருக்கு எதிரான குற்றச்சாட்டை சந்தேகத்திற்கு இடமின்றி பிராசிகியூஷன் தரப்பினர் வெற்றிகரமாக நிரூபித்துள்ளனர் என்று நீதிபதி மியோர் சுலைமான் அஹ்மாட் தர்மிஸி தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
கோகுலன் சிறைத் தண்டனை அமலாக்கம் இன்று முதல் நடப்புக்கு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதி இரவு 10.58 மணியளவில் கடை ஒன்றின் வெளியே தனது சகோதரின் காதலனை நீண்ட கத்தியால் தாக்கி கடும் காயங்களை விளைவித்ததாக கோகுலன் மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 326 பிரிவின் கீழ் கோகுலன் குற்றஞ்சாட்டப்பட்டார்.








