Feb 15, 2026
Thisaigal NewsYouTube
சீனப் புத்தாண்டிற்காக 16 பொருட்களுக்கு விலைக் கட்டுப்பாடு
தற்போதைய செய்திகள்

சீனப் புத்தாண்டிற்காக 16 பொருட்களுக்கு விலைக் கட்டுப்பாடு

Share:

கூலிம், பிப்ரவரி.15-

இம்மாதம் கொண்டாப்படவுள்ள சீனப் புத்தாண்டை முன்னிட்டு 16 விதமான சமையல் பொருட்கள் விலை கட்டுப்பாட்டுப் பட்டியலில் இருப்பதாக உள்நாட்டு வாணிக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் துணை அமைச்சர் செனட்டர் டத்தோ டாக்டர் ஹஜா ஃபௌஸியா சாலே தெரிவித்தார்.

கூலிம் மாவட்டத்தில் அமைந்துள்ள லோட்ஸ் பேராங்காடியில் சீனப் புத்தாண்டின் விலை கட்டுப்பாட்டு நிகழ்வினை அவர் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். இவ்வருட சீனப் புத்தாண்டை முன்னிட்டு 13/2/2026 ஆம் தேதி தொடங்கி 21 /2 / 2026 ஆம் தேதி வரை குறிப்பிட்ட 16 பொருட்கள் விலை கட்டுப்பாட்டில் இருக்கும் என அவர் கூறினார். வெள்ளை வௌவால் மீன், குறிப்பிட்ட சில காய்கறிகள், கோழி, இறால், இறைச்சி, மாநிலங்களின் விலையைப் பின்பற்றும் பன்றி இறைச்சி ஆகியவை அந்த 16 பொருட்களில் அடங்கும்.

மேலும், பொருட்களின் விலைக் கட்டுப்பாட்டு சீனப் புத்தாண்டின் நான்கு நாட்களுக்கு முன்பும் சீனப் புத்தாண்டு அன்றும் மற்றும் சீனப் புத்தாண்டுக்கு நான்கு நாட்களுக்குப் பிறகும் நடைமுறையில் இருக்கும் என்றார் ஃபௌஸியா சாலே. 16 விலைக் கட்டுப்பாட்டுப் பொருட்கள் இரண்டு விதமாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதாவது மலேசியாவின் மேற்கு பகுதியான சபாவில் 15 பொருட்களும், 14 பொருட்கள் கிழக்கு மலேசிய பகுதியிலும் மற்றும் 15 பொருட்கள் சரவாக்கிலும் பட்டியலில் இடம் பெற்றிருப்பதாக அவர் தெரிவித்தார்.

சீனப் புத்தாண்டின் விலைப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் அனைத்துப் பொருட்களும் போதுமான அளவில் இருப்பதை உறுதிச் செய்த பின்பே சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வரப்படுவதாக ஃபௌஸியா சாலே குறிப்பிட்டார். ஆகவே, அனைத்து வியாபாரிகளும் விலை பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள பொருட்களின் விலைகளைப் பின்பற்ற வேண்டும். அதோடு, உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு அவ்வப்போது சந்தைகள் பேராங்காடிகள், கடைகள் என அனைத்து வியாபாரத் தளங்களையும் கண்காணித்து வருவதாக அவர் தெரிவித்தார். இந்நிகழ்வில் கெடா மாநில உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவினப் பிரிவின் தலைமை அதிகாரி முகமாட் நிஜாம் பின் ஜமாலுடினும் கலந்து கொண்டார்.

Related News

ஓப் பந்தாவ் 2026 திட்டம் : இரமலான் – நோன்புப் பெருநாள் பண்டிகைக் கால விலைக் கண்காணிப்பு

ஓப் பந்தாவ் 2026 திட்டம் : இரமலான் – நோன்புப் பெருநாள் பண்டிகைக் கால விலைக் கண்காணிப்பு

நேர்மையும் சமூகப் பாதுகாப்பும் முக்கியம்: அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் வலியுறுத்து

நேர்மையும் சமூகப் பாதுகாப்பும் முக்கியம்: அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் வலியுறுத்து

2030-க்குள் மலேசியாவை 'AI தேசமாக' மாற்றும் அரசாங்கத்தின் GII திட்டம்: அமைச்சர் கோவிந்த் சிங் டியோ அறிவிப்பு

2030-க்குள் மலேசியாவை 'AI தேசமாக' மாற்றும் அரசாங்கத்தின் GII திட்டம்: அமைச்சர் கோவிந்த் சிங் டியோ அறிவிப்பு

சீனப் புத்தாண்டு, ரமலான் எதிரொலி: முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனப் போக்குவரத்து அதிகரிப்பு - எல்எல்எம் தகவல்

சீனப் புத்தாண்டு, ரமலான் எதிரொலி: முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனப் போக்குவரத்து அதிகரிப்பு - எல்எல்எம் தகவல்

ரவாங் கோயில் இடிப்பு: "இனவாத ரீதியாகச் சித்தரிக்க வேண்டாம்" - சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஷாஸெலி கஹார் அறிவுறுத்தல்

ரவாங் கோயில் இடிப்பு: "இனவாத ரீதியாகச் சித்தரிக்க வேண்டாம்" - சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஷாஸெலி கஹார் அறிவுறுத்தல்

பொதுப் பணத்தைக் கையாடல் செய்தால் கைது உறுதி: தலைவர்களுக்கு அன்வார் கடும் எச்சரிக்கை

பொதுப் பணத்தைக் கையாடல் செய்தால் கைது உறுதி: தலைவர்களுக்கு அன்வார் கடும் எச்சரிக்கை