Dec 3, 2025
Thisaigal NewsYouTube
இளம் தலைவர்களை உருவாக்கும் திட்டம்: நாடாளுமன்ற அவைத் தலைவர் அதிரடி அறிவிப்பு!
தற்போதைய செய்திகள்

இளம் தலைவர்களை உருவாக்கும் திட்டம்: நாடாளுமன்ற அவைத் தலைவர் அதிரடி அறிவிப்பு!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.14-

மலேசியாவின் எதிர்காலத் தலைவர்களை உருவாக்குவதற்காக, செகோலா பார்லிமண்ட் எனப்படும் நாடாளுமன்றப் பள்ளி, "தேசிய சேவை பயிற்சித் திட்டம் (PLKN 3.0)" போன்ற புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்கள் இளம் தலைமுறையினருக்கு நாடாளுமன்ற செயல்முறைகள், கொள்கை உருவாக்கம், தன்னம்பிக்கை போன்ற முக்கியக் கூறுகளைக் கற்றுக் கொடுக்கும் என நாடாளுமன்ற அவைத் தலைவர் டான் ஶ்ரீ ஜொஹாரி அப்துல் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நடக்கும் சண்டைகளும் விவாதங்களும், மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கவலை தெரிவித்தார். இந்தப் புதிய திட்டங்களின் மூலம், எதிர்காலத்தில் மலேசியாவில் 222 திறமையான, அறிவுப்பூர்வமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் உருவாவார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். இதுவரை 700-க்கும் மேற்பட்ட பள்ளிகள் இந்தத் திட்டத்தில் பங்கேற்றுள்ளதாகவும், இரண்டு ஆண்டுகளுக்குள் 2,400 பள்ளிகளைச் சேர்ப்பதே இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related News