உலு சிலாங்கூர், அக்டோபர்.17-
15 வயது பையனுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததாக நம்பப்படும் 44 வயது நபர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். உலு சிலாங்கூர், புக்கிட் செந்தோசாவில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் தொடர்பில் பள்ளிவாசல் ஒன்றின் பராமரிப்பாளரான அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் இப்ராஹிம் ஹுசேன் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட சிறுவனின் நண்பரைப் பார்ப்பதற்காக காரில் சென்ற வேளையில் அந்த நபர், இத்தகைய ஆபாசச் சேட்டையைப் புரிந்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் அந்த போலீஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
அந்த நபரை நேற்று அக்டோபர் 16 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை தடுத்து வைப்பதற்கு போலீசார், நீதிமன்ற அனுமதியைப் பெற்றுள்ளதாக அவர் மேலும் கூறினார்.








