ஈப்போ , ஆகஸ்ட் 20-
இரு பிள்ளைகளைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியது தொடர்பாக மூன்று குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருந்த 44 வயது மாற்றான் தந்தை, இன்று பேராக், ஈப்போ செசியன் நீதிமன்றத்தில் தம்மீதான குற்றத்தை மறுத்துள்ளார்.
2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதத்தில், பந்தய் ரெமிஸ் -இல், உள் வீடொன்றில், 14 வயது பிள்ளையை உடல் ரீதியான பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாகவும்; 2022-ஆம் ஆண்டில் அதே வீட்டில் 9 வயது நிரம்பிய சிறுமியைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகவும் அவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
பின்னர், மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் பாதிக்கப்பட்டவர்களைத் தொந்தரவு செய்யக்கூடாது என்ற கூடுதல் நிபந்தனையுடன், ஒருவர் உத்தரவாதத்துடனும் ஆயிரம் ரிங்கி பிணை தொகை செலுத்தியும் குற்றம் சாட்டப்பட்டவர் பிணையில் வெளியேற நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
வழக்கின் மறுசெவிமடுப்பு அக்டோபர் 23 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.








