Dec 24, 2025
Thisaigal NewsYouTube
சிலாங்கூர் சுல்தான், அரசியார் தெங்கு பெர்மைசூரி கிறிஸ்துமஸ் வாழ்த்து
தற்போதைய செய்திகள்

சிலாங்கூர் சுல்தான், அரசியார் தெங்கு பெர்மைசூரி கிறிஸ்துமஸ் வாழ்த்து

Share:

ஷா ஆலாம், டிசம்பர்.24-

சிலாங்கூரைச் சேர்ந்த அனைத்து கிறிஸ்தவர்களுக்கும், மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷாவும், சிலாங்கூர் அரசியார் தெங்கு பெர்மைசூரி நோராஷிகினும் தங்களது கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையானது மகிழ்ச்சியுடனும், செழிப்புடனும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து ஒற்றுமையாகக் கொண்டாடப்பட வேண்டும் என்று சிலாங்கூர் அரச அலுவலக முகநூல் பக்கத்தில் சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா தெரிவித்துள்ளார்.

இந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் மூலம் வெளிப்படுத்தப்படும் அன்பும், பரஸ்பர மரியாதை உணர்வும், நாட்டிலுள்ள பல்லின சமூகத்தினரிடையே ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் தொடர்ந்து வலுப்படுத்தும் என்று தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News