கோல பிலா, ஆகஸ்ட்.13-
இன்று தனது 19 வயது பிறந்த நாளைக் கொண்டாடவிருந்த இளைஞர் ஒருவர், சாலை விபத்தில் உயிரிழந்தது, அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியில் உறைய வைத்தது.
இந்த விபத்து இன்று காலை 8.20 மணியளவில் கோல பிலா, ஜுவாசே அருகில் உள்ள கோல பிலா-பத்து கிகிர் சாலையில் நிகழ்ந்தது.
ஹடாம் ஹைரி அஸ்வான் என்ற அந்த இளைஞர் பயணித்த மோட்டார் சைக்கிளை, கார் ஒன்று மோதியதைத் தொடர்ந்து அவர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக கோல பிலா மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் முஸ்தபா ஹுசேன் தெரிவித்தார்.








