Dec 3, 2025
Thisaigal NewsYouTube
இன்று நள்ளிரவு தொடங்குகிறது ரோன் 95 சலுகை திட்டம்: 16 மில்லியன் வாகன உரிமையாளர்கள் பயன் பெறுவர்- ஒவ்வொருவரும் மாதம் 18 ரிங்கிட்டை மீதப்படுத்தலாம்
தற்போதைய செய்திகள்

இன்று நள்ளிரவு தொடங்குகிறது ரோன் 95 சலுகை திட்டம்: 16 மில்லியன் வாகன உரிமையாளர்கள் பயன் பெறுவர்- ஒவ்வொருவரும் மாதம் 18 ரிங்கிட்டை மீதப்படுத்தலாம்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.29-

நாடு முழுவதும் இன்று நள்ளிரவு முதல் புடி 95 எனும் ரோன் 95 பெட்ரோல் சலுகைத் திட்டம் தொடங்குகிறது. மலேசியர்களுக்கு அரசாங்கம் வழங்கும் இந்த திட்டத்தின்படி, லிட்டருக்கு 2 ரிங்கிட் 05 காசாக இருக்கும் ரோன் 95 பெட்ரோல், ஒரு ரிங்கிட் 99 காசுக்கு விற்கப்படவிருக்கிறது.

ரோன் 95 பெட்ரோலை வாங்குவதற்கு மலேசியர்கள், முதல் முறையாகத் தங்களின் மைகார்ட் அட்டையை பயன்படுத்தவிருகின்றனர். மாதம் ஒன்றுக்கு 300 லிட்டர் வரை மலேசியர்கள் பெட்றோலைப் பெறலாம். இதன் மூலம் லிட்டருக்கு 6 காசு வீதம், மாதம் ஒன்றுக்கு 18 ரிங்கிட்டை ஒவ்வொரு மலேசியரும் மீதப்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் வழி நாட்டில் 16 மில்லியன் வாகன உரிமையாளர்கள் பயன் பெறவிருக்கின்றனர். இதற்காக 34.5 பில்லியன் ரிங்கிட் இழப்பீட்டை அரசாங்கமே ஏற்றுக் கொள்ளவிருக்கிறது.

சலுகை விலையில் ரோன் 95 பெட்றோலைப் பெற, மலேசியர்கள் வழக்கம் போல் பணம் செலுத்துவதற்கு முன்பு பம்ப் இயந்திரத்தில் மைகாட்டைச் செருக வேண்டும் அல்லது முகப்பிடங்களில் பணம் செலுத்தும்போது மைகாட்டைக் காட்ட வேண்டும்.

அரசாங்கத்தின் இந்த புதிய திட்டத்தினால் விரயங்கள், ஊழல் போன்ற பழைய முறையின் கீழ் நிலவி பிரச்னைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்