Feb 18, 2026
Thisaigal NewsYouTube
செராதிங் குடும்பக் கொலை - தற்கொலை துயரச் சம்பவம்: பகாங் சுல்தான் ஆழ்ந்த வருத்தம்
தற்போதைய செய்திகள்

செராதிங் குடும்பக் கொலை - தற்கொலை துயரச் சம்பவம்: பகாங் சுல்தான் ஆழ்ந்த வருத்தம்

Share:

குவாந்தான், பிப்ரவரி.18-

குவாந்தான் செராதிங் பகுதியில் நேற்று நடந்த துயரமான கொலை - தற்கொலைச் சம்பவம் குறித்து மேன்மை தங்கிய பகாங் சுல்தான் Abdullah Ri’ayatuddin Al-Mustafa Billah Shah தனது ஆழ்ந்த வருத்தத்தையும் கவலையையும் தெரிவித்துள்ளார்.

ஒரே குடும்பத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது மிகவும் அதிர்ச்சியளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதே வேளையில், உடன் இருப்பவர்களில் யாருக்காவது குணநலன்களில் மாற்றம் தெரிந்தால், மக்கள் அதனை ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

அப்படிப்பட்ட அறிகுறிகள் தென்பட்டால் அதனைப் பொருட்படுத்தாமல் இருக்கக்கூடாது என்று குறிப்பிட்டுள்ள அவர், எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க, மக்கள் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அதே வேளையில், இச்சம்பவத்தில் இறந்தவர்களுக்காக ஓதப்படும் Al-Fatihah நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் சுல்தான் அழைப்பு விடுத்துள்ளார்.

செராதிங், லோரோங் செராதிங் டாமாய் பகுதியில் நேற்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர், வீடு ஒன்றில் சடலமாகக் கண்டறியப்பட்டனர்.

அக்குடும்பத்தைச் சேர்ந்த 32 வயதான ஆடவர், தனது 28 வயதான மனைவி, 55 வயதான தாயார், 3 மற்றும் 4 வயதுடைய இரு குழந்தைகள் ஆகியோரைக் கூர்மையான ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்து விட்டு, தானும் தற்கொலை செய்திருக்கலாம் என பகாங் மாநில போலீஸ் தலைவர் யஹாயா ஒத்மான் தெரிவித்துள்ளார்.

சிலாங்கூரில் பணியாற்றி வந்த அந்த ஆடவர், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தான் குவாந்தானில் பணியாற்றத் தொடங்கியதாகவும் கூறப்படுகின்றது.

Related News

கூலாயில் மோட்டார் விபத்து: சம்பவ இடத்திலேயே பலியான தம்பதி

கூலாயில் மோட்டார் விபத்து: சம்பவ இடத்திலேயே பலியான தம்பதி

அரசியல் விமர்சகர் முரே ஹண்டருக்கு எதிரான அவதூறு வழக்கைத் திரும்பப் பெற்றது எம்சிஎம்சி

அரசியல் விமர்சகர் முரே ஹண்டருக்கு எதிரான அவதூறு வழக்கைத் திரும்பப் பெற்றது எம்சிஎம்சி

ரொட்டி செனாய், பானத்திற்கு 120 வெள்ளி கட்டணம்  வசூலித்தது ஏன்? -  சிரம்பான் உணவகத்திற்கு அமைச்சு நோட்டீஸ்

ரொட்டி செனாய், பானத்திற்கு 120 வெள்ளி கட்டணம் வசூலித்தது ஏன்? - சிரம்பான் உணவகத்திற்கு அமைச்சு நோட்டீஸ்

அதிகரித்து வரும் குடும்ப உறுப்பினர்களின் கொலை - தற்கொலைச் சம்பவங்கள்: உள்ளூர் சமூக ஆதரவு மையங்களை மேம்படுத்த அமைச்சர் நான்சி சுக்ரி உறுதி

அதிகரித்து வரும் குடும்ப உறுப்பினர்களின் கொலை - தற்கொலைச் சம்பவங்கள்: உள்ளூர் சமூக ஆதரவு மையங்களை மேம்படுத்த அமைச்சர் நான்சி சுக்ரி உறுதி

காச நோய் தொற்றுக்கு உள்ளானவர்களில் 85 விழுக்காட்டினர் உள்ளூர்வாசிகள்: சுகாதாரத்துறை தகவல்

காச நோய் தொற்றுக்கு உள்ளானவர்களில் 85 விழுக்காட்டினர் உள்ளூர்வாசிகள்: சுகாதாரத்துறை தகவல்

அம்பாங்கில் ஏற்பட்ட தீ விபத்து: 2 வீடுகள், 2 கார்கள் சேதம்

அம்பாங்கில் ஏற்பட்ட தீ விபத்து: 2 வீடுகள், 2 கார்கள் சேதம்