பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசினின் பெர்சத்து கட்சியை சேர்ந்த கோல கங்சார் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ இஸ்கண்டார் டிசுல்கானாயிர், பிரதமர் டத்தோஸ்ரீ அனவார் இப்ராஹிமிற்கு பிளவுப்படாத ஆதரவை வழங்குவதாக இன்று அறிவித்துள்ளார்.
தாம் பெரிக்காத்தான் நேஷனல் எம்.பி.யாக வீற்றிருந்த போதிலும் தமது நலனை விட தமது கோல கங்சார் தொகுதி மக்களின் நலனே முக்கியம் என்று இஸ்கண்டார் டிசுல்கானாயிர்குறிப்பிட்டார்.
பெரிக்காத்தான் நேஷனல் எம்.பி. என்ற முறையில் தொகுதி மக்களுக்கு எந்தவொரு உதவியையும் செய்ய முடியாமல் வெறுமனே பார்த்துக் கொண்டு இருப்பதை விட பிரதமரை ஆதரிப்பது மூலம் கிடைக்கக்கூடிய உதவிகள் தொகுதி மக்களை சென்றடைவதை காணவே விரும்புவதாக இஸ்கண்டார் டிசுல்கானாயிர் தெரிவித்துள்ளார்.








