May 22, 2026
Thisaigal NewsYouTube
நடுவரின் முடிவில் அதிருப்தி ஏற்பட்டதால் சண்டை
தற்போதைய செய்திகள்

நடுவரின் முடிவில் அதிருப்தி ஏற்பட்டதால் சண்டை

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி 27 -

காற்பந்து போட்டியில் நடுவரின் முடிவில் அதிருப்தி அடைந்த அணிக்குழுவினர் சண்டையிட்டு கொண்ட காணொளி ஒன்று நேற்று சமூக வலைத்தளங்களில் பரவலாக வைரலாகியது.

இச்சம்பவம் குறித்து தமது தரப்பினருக்கு புகார் கிடைக்க பெற்றதாக செபராங் பெராய் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரின்டென்டன் சித்தி னோர் சாலாவாத்தி சாட் தெரிவித்தார்.

30 முதல் 40 வயதிற்கு உட்பட்ட மூன்று உள்ளூர் ஆண்கள் மேல் விசாரணைக்காக போலீசார் கைது செய்ததாக இன்று ஓர் அறிக்கையில் சித்தி னோர் கூறினார்.

கைது செய்யப்பட்ட அந்நபர்கள் மீது ஏற்கனவே குற்றப்பதிவுகள் இருப்பதுடன் இச்சம்பவத்தில் சம்பவந்தப்பட்ட மற்ற நபர்களை தேடும் முயற்சியும் தொடரப்பட்டு வருவதாக சித்தி னோர் குறிப்பிட்டார்.

இதுக்குறித்து, குற்றவியல் சட்டம் 147 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவடுடன் குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை அல்லது பிரம்படி அல்லது இரண்டுமே வழங்கப்படலாம் என்று சித்தி னோர் விளக்கினார்.

Related News