ஜார்ஜ்டவுன், டிசம்பர்.31-
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, 26 கிலோ போதைப் பொருட்களைக் கடத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், மூன்று சீன பிரஜைகளுக்கு எதிராக, பினாங்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டது.
மாஜிஸ்ட்ரேட் நீதிபதி Nadratun Naim Mohd Saidi முன்னிலையில் வாசிக்கப்பட்ட அக்குற்றச்சாட்டுகளை அவர்கள் மூவரும் ஒப்புக் கொண்டனர்.
கடந்த டிசம்பர் 20-ஆம் தேதி, இரவு 10 மணியளவில், Adorna Gold Complex அடுக்குமாடிக் குடியிருப்பில், 26 கிலோ methamphetamine வகை போதைப் பொருளை அவர்கள் கடத்த முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அபாயகரமான போதைப்பொருள் சட்டம் 1952, பிரிவு 39B(1)(a) கீழ் அவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ விதிக்கப்படலாம்.
அதே வேளையில், குறைந்தபட்சம் 12 பிரம்படிகள் விதிக்க அச்சட்டத்தில் இடம் உள்ளது.








