Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மைகாட் அட்டையில் சேதமுற்ற மென்பொருளை மாற்றிக் கொள்ள அக்டோபர் 7 ஆம் தேதி வரை இலவசம்
தற்போதைய செய்திகள்

மைகாட் அட்டையில் சேதமுற்ற மென்பொருளை மாற்றிக் கொள்ள அக்டோபர் 7 ஆம் தேதி வரை இலவசம்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.22-

மக்கள் தங்களின் மைகாட் அட்டையில் சேதமுற்ற மென்பொருளை தேசிய பதிவு இலாகா அலுவலகமான ஜேபிஎன்னில் வரும் அக்டோபர் 7 ஆம் தேதி வரை இலவசமாக மாற்றிக் கொள்ளலாம் என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள ஜேபிஎன் அலுவலகத்தின் முகப்பிடங்களில் மக்கள் இந்த இலவச சேவையைப் பெறலாம் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

புதியதாக வழங்கப்படும் இந்த இலவச சேவையின் மூலம் மென்பொருள் மாற்றுவது மற்றும் இதர செலவினங்களுக்கு 71 லட்சத்து 4 ஆயிரத்து 660 ரிங்கிட் செலவை அரசாங்கம் ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று சைஃபுடின் விளக்கினார்.

வழங்கப்பட்டுள்ள இந்த காலக்கட்டத்தில் மைகாட் மென்பொருள் மாற்றுவதற்கான அனைத்து செலவினத்தையும் மடானி அரசாங்கம் ஏற்பதாக சைஃபுடின் குறிப்பிட்டார்.

பெட்ரோல் ரோன் 95 உதவித் தொகைக்கான பூடி 95 திட்டத்தில் தகுதி வாய்ந்த மலேசியர்கள் நன்மை அடையும் அதே வேளையில் அந்தத் திட்டம் சுமூகமாக நடைபெறுவதை உறுதிச் செய்வதற்கு மைகாட் அட்டையில் தொழிட்நுட்ப பிரச்னை இருக்கக்கூடாது என்று அமைச்சர் விளக்கினார்.

Related News