ஆண்டிறுதி பருவமழையால் ஏற்படும் வெள்ளப் பேரிடரை எதிர்கொள்ள மலாக்காவில் 233 பள்ளிகள் துயர் துடைப்பு மையங்களாகச் செயல்படத் தயாராக உள்ளதாக மலாக்கா மாநில கல்வி இலகாவின் பள்ளி நிர்வாகப் பிரிவுன் துணை இயக்குநர் காரிம் துமீன் தெரிவித்தார்.
மேலும், முக்கியமான தேர்வை எழுதும் இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கு இந்தத் தயார்நிலையால் எந்த இடையூறும் இருக்காது எனவும் அவர் சொன்னார்.
மற்றொரு நிலவரத்தில், புயலால் பாதிக்கப்பட்ட பத்து பெரென்டாம் வ் இடைநிலைப் பள்ளியின் மறு சீரமைப்புப் பணிகள் 40 விழுக்காடு நிறைவடைந்துள்ள நிலையில், இம்மாத மத்தியில் அப்பள்ளி முழுமையாகச் செயல்படத் திட்டமிடப்பட்டுள்ளதாக காரிம் துமின் தெரிவித்தார்.








