Mar 12, 2026
Thisaigal NewsYouTube
பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக போலீசில் புகார்
தற்போதைய செய்திகள்

பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக போலீசில் புகார்

Share:

அரசாங்க ஏஜென்சி ஒன்றுக்கு தலைமையேற்றுள்ள முக்கிய அதிகாரி ஒருவர் தமக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக 30 வயது மாது ஒருவர் அளித்துள்ள போலீஸ் புகாரைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அரசாங்க உயர் அதிகாரியை புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் விசாரணைக்கு அழைத்துள்ளது என்று போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

நாளை வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு புத்ராஜெயா போலீஸ் தலைமையகத்தில் அந்த அரசாங்க உயர் அதிகாரியிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என்று ஐஜிபி குறிப்பிட்டார்.

உயர் பதவி வகிக்கும் அந்த அரசு அதிகாரி, கடந்த ஆண்டிலிருந்து WhatsApp மூலமாக தமக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக நிதித்துறையில் ஆலோசகராக பணியாற்றி வரும் அந்த மாது தனது போலீஸ் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட மாது அளித்துள்ள போலீஸ் புகார், தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!