பிரதமர் துறையின் கீழ் செயல்பட்டு வரும் இந்தியர்களின் சமூகவியல்,பொருளாதார உருமாற்றுப்பிரிவான மித்ரா, 2023 ஆம் ஆண்டுக்கான பொருளாதார மற்றும் தொழில் வாய்ப்பு பயிற்சித் திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
டத்தோ ரா. ரமணன் தலைமையிலான மித்ரா சிறப்புப்பணிக்குழு, இந்திய சமூகத்தை சேர்ந்த பி40 மற்றும் எம்40 தரப்பை சேர்ந்த இந்திய இளைஞர்களுக்கு டொரோன் தொழில்துறை மற்றும் அவ்தோமஷன் தொழில்துறை ஆகியவற்றில் தொழில்திறன் கல்வியை மேம்படுத்திக்கொள்தற்கு இரு வகையான பயிற்சிகளை வழங்கவிருக்கிறது.
ஆர்வமுள்ள இளைஞர்கள் டொரோன் தொழில்திறன் பயிற்சிக்கு டொரோன் ஒபெரேஷன்ஸ் மற்றும் டாதா செர்விஸ் அல்லது டி.ஒ.டி பயிற்சிக்கு மித்ராடொரொன்.கோம் என்ற அகப்பக்கத்திலும், எலெக்திரிவாட் ஆட்டோமேஷன் எட்வான்செமென்ட் பயிற்சிக்கு இவி-மித்ரா.கோம் என்ற அகப்பக்கத்திலும் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் இறுதி நாள், அடுத்த மாதம் அதாவது 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் தேதியாகும் என்று டத்தோ ரமணன் அறிவித்துள்ளார்.

Related News

முன்னாள் இராணுவத் தளபதி மற்றும் அவரது மனைவிக்கு எதிராக 4 பண மோசடிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: குற்றத்தை மறுத்த இருவரும் விசாரணை கோரினர்

Grok மீதான கட்டுப்பாடுகளை அதிகரித்தது X நிறுவனம் - ஃபாமி ஃபாட்சீல் தகவல்

தைப்பூசத்தை முன்னிட்டு பினாங்கில் இலவச படகு சவாரி

ஆயுதப்படைகளில் சீர்த்திருத்தங்களும், துடைத்தொழிப்பு நடவடிக்கையும் அவசியம் – அன்வார் வலியுறுத்து

வெளிநாட்டு தொழில்நுட்பத்தை சார்ந்திருப்பதை DIPN குறைக்கிறது: காலிட் நோர்டின்


