May 6, 2026
Thisaigal NewsYouTube
பணமில்லை என்று பிள்ளைகள் பள்ளிக்கூடத்திற்குச் செல்லாமல் இருக்கக்கூடாது - டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன்
தற்போதைய செய்திகள்

பணமில்லை என்று பிள்ளைகள் பள்ளிக்கூடத்திற்குச் செல்லாமல் இருக்கக்கூடாது - டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன்

Share:

கூலிம், டிசம்பர்.13-

கெடா மாநிலத்திலுள்ள அனைத்து பிள்ளைகளும் பள்ளிக்கூடத்திற்குச் செல்ல வேண்டும். பெற்றோர்களிடம் பணமில்லை, பள்ளிக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கு வசதியில்லை என்ற காரணத்தை முன்வைத்து பிள்ளைகள் பள்ளிக்கூடத்திற்குச் செல்லாமல் இருக்கக்கூடாது என்று உள்துறை அமைச்சரும் கெடா மாநில பக்காத்தான் ஹரப்பான் கட்சியின் மேம்பாட்டுத் தலைவருமான டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் குறிப்பிட்டார் .

இன்று பாடாங் செராய் தொகுதியின் கிராமத்து மேம்பாட்டு மற்றும் பாதுகாப்புச் குழுவின் ஏற்பாட்டில் கூலிம் ஹய் தேக் பாக்கில் அமைந்துள்ள ஹய் தேக் பாக் விளையாட்டு மண்டபத்தில் நடைபெற்ற "பள்ளிக்கு திரும்புவோம்" நிகழ்விற்குத் தலைமையேற்று உரையாற்றும் போது சைஃபுடின் இதனைத் தெரிவித்தார்.

2026 ஆம் ஆண்டின் பள்ளித் தொடக்கத்தின் முன் ஏற்பாடுகளில் ஒன்றான பிள்ளைகளுக்கு புத்தம் புதிய சீருடைகள், காலணிகள் மற்றும் பள்ளி உபகரணங்களை வாங்குதல் என பல செலவுகள் பெற்றோர்களுக்கு இருக்கின்றன.

அவர்களின் சுமைகளைக் குறைப்பதற்காகவே முதல் கட்டமாக பாடாங் செராய் வட்டாரத்திலுள்ள 1000 மாணவர்களுக்கு தலா 300 ரிங்கிட் என 3 லட்சம் ரிங்கிட் செலவில் பள்ளிக்குத் தேவையான பொருட்கள் வாங்குவத்தற்கான பற்றுச் சீட்டுகள் வழங்கப்பட்டிருப்பதாக டத்தோ ஸ்ரீ சைஃபுடின் குறிப்பிட்டார்.

பசார் ராயா சாக்கான் (SAKKAN) ஒத்துழைப்புடன் பள்ளிச் சீருடைகளும் பொருட்களும் பிள்ளைகளுக்கு வழங்கப்பட்டிருப்பதாக சைஃபுடின் தெரிவித்தார்.

கிராமப்புறங்களிலுள்ள வசதி குறைந்த நிலைகளில் இருக்கும் பிள்ளைகள் அடையாளம் காணப்பட்டு இப்பற்றுச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, கிராமப் புறங்களில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்திச் செய்வதற்கே இந்த கிராமப்புற மேம்பாட்டு மற்றும் பாதுகாப்புக் குழு செயல்படும் என்றார் அமைச்சர் சைஃபுடின்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்