நான்கு நண்பர்கள் கூட்டாக சேர்ந்து கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக நம்பப்படும் போதைப்பொருள் கடத்தல் கும்பல் ஒன்றை ஈப்போ போலீசார் முறியடித்துள்ளனர். கடந்த வாரம் ஈப்போவில் இரண்டு வெவ்வேறு இடங்களில் போலீசார் நடத்திய சோதனையில் 25 லட்சத்து 40 ஆயிரம் வெள்ளி பெறுமானமுள்ள 72.49 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ செரி முஹமாட் யுஸ்ரி ஹாஸ்ஸான் பாஸ்ரி தெரிவித்தார்.
முதல் சம்பவம் ஈப்போ, க்லெபாங் ட்ரோபிக்கா என்ற இடத்தில் மேற்கொள்ளப்பட்டது. இதில் 25 மற்றும் 36 வயதுடைய இரு நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவ்விருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் பயன்படுத்திய காரிலிருந்து 72.49 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக யுஸ்ரி ஹாஸ்ஸான் குறிப்பிட்டார். இரண்டாவது சோதனை, ஈப்போ, கம்போங் ராப்பாட்டில் நடத்தப்பட்டதில் அந்த கும்பலுடன் தொடர்புடைய 30 மற்றும் 40 வயதுடைய மேலும் இருவர் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை


