கோலாலம்பூர், செப்டம்பர்.06-
வரும் அக்டோபர் மாதம் மலேசியாவில் நடைபெறவுள்ள 47-வது ஆசியான் உச்சி மாநாட்டிற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வருவதை எதிர்த்து தலைநகரில் இன்று சுமார் 300 பேர் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று மாலை 5 மணியளவில் ஜாலான் புக்கிட் பிந்தாங்கில் உள்ள துரித உணவகத்திற்கு எதிரே, வெளிநாட்டினர் உட்பட 300 பேர் கொண்ட போராட்டவாதிகள், டிரம்புக்கு எதிராக கோஷத்தை எழுப்பியவாரே, கேஎல்சிசி டிவின் டவர் நோக்கி அணிவகுத்துச் சென்றனர்.
கைகளில் ட்ரம்பின் புகைப்படங்கள் பதித்த பதாகைகளை ஏந்திச் சென்ற அவர்கள், டிரம்ப்பின் வருகையை நிராகரிக்குமாறு மலேசிய அரசாங்கத்தை வலியுறுத்தினர்.








