Sep 27, 2026
Thisaigal NewsYouTube
சட்டவிரோத வீட்டுப்பணியாளர் விநியோக கும்பல் முறியடிப்பு: 8 இந்தோ. பெண்கள் மீட்பு
தற்போதைய செய்திகள்

சட்டவிரோத வீட்டுப்பணியாளர் விநியோக கும்பல் முறியடிப்பு: 8 இந்தோ. பெண்கள் மீட்பு

Share:

கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் சட்டவிரோதமாக வீட்டுப்பணியாளர்களை விநியோகித்து வந்த கும்பலை குடிநுழைவுத்துறை அதிரடியாக முறியடித்துள்ளது. கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி, ஷா ஆலம், காஜாங், ஸ்ரீ கெம்பாங்கான் உள்ளிட்ட 11 இடங்களில் நடத்தப்பட்ட சிறப்புச் சோதனையில், கட்டாய உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்ட 8 இந்தோனேசியப் பெண்கள் மீட்கப்பட்டனர்.

இந்த நடவடிக்கையின் போது, 'இபு மஸ்னா' மற்றும் 'இபு நான்சி' என அழைக்கப்படும் சட்டவிரோத ஏஜெண்டுகள் உட்பட இரு உள்ளூர் பெண்கள், இரு ஏமன் நாட்டு ஆண்கள் மற்றும் இரு இந்தோனேசியப் பெண்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், முறையான ஆவணங்களின்றி தங்கியிருந்த 18 இந்தோனேசியர்களும் பிடிபட்டனர் என்று மலேசிய குடிநுழைவுத்துறையின் தலைமை இயக்குநர் டத்தோ சகாரியா ஷாபான் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த கும்பல் கடந்த ஓராண்டாகச் செயல்பட்டு வந்ததும், ஒரு பணியாளருக்கு 4,500 முதல் 6,000 ரிங்கிட் வரை முதலாளிகளிடமிருந்து வசூலித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சோதனையில் 21 கடப்பிதழ்கள் மற்றும் ஒரு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவர்கள் மீது கடத்தல் தடுப்புச் சட்டம். குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று டத்தோ சகாரியா விளக்கினார்.

Related News

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்