Oct 18, 2026
Thisaigal NewsYouTube

ஓன்லைன் மோசடிகளுக்கு முக்கிய நகராக சிரம்பான்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஓன்லைன் மோசடிகளுக்கு முக்கிய நகராக சிரம்பான்

சிரம்பான்,செப்டம்பர் 03-

OnLine இணைய மோசடி சம்பவங்கள் அதிகமாக நிகழும் மாவட்டங்களில் ஒன்றாக சிரம்பான் வகைப்படுத்தப்பட்டுள்ளது என்று நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அஹ்மட் ஜாஃபிர் முகமட் யூசோப் தெரிவித்தார்.

கடந்த ஜனவரியிலிருந்து ஆகஸ்ட் மாதம் வரை ஓன்லான் மோசடி சம்பவங்கள் தொடர்பாக விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்ட ஆறு மாவட்டங்களில் சிரம்பான் முன்னிலையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

ஓன்லைன் மோசடிகள் தொடர்பாக இக்காலக்கட்டத்தில் சிரம்பானில் 701 மோசடி சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் நீலாய், 434 சம்பவங்களுடன் மாநிலத்தில் 15 இடத்தில் இருப்பதாக அவர் குறிப்பட்டார்.

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் ஒட்டுமொத்த நிலையில் 1, 710 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றின் வழி 4 கோடியே 71 லட்சம் வெள்ளி இழப்பு ஏற்பட்டுள்ளதாக டத்தோ அஹ்மட் ஜாஃபிர் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →