எதிர்வரும் நவம்பர் 10 ஆம் தேதி சிலாங்கூர் மாநில அரசின் 2024-ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை அம்மாநில முதல்வர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார்
அதனை சிலாங்கூர் டிவி, மீடியா சிலாங்கூர் முகநூல் பக்கம், அமிருடின் ஷாரியின் முகநூல் பக்கம் ஆகியவற்றின் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
வரவு செவுத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் குறித்த செய்திகள் தமிழ், சீனம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இணையத்திலும் வெளியிடப்பட உள்ளன.
பொது மக்கலின் கருத்துகளும் இந்த வரவு செலவுத் திட்டத் தயாரிப்பில் இணைக்கப்பட்டுள்ளன.
வரவு செலவுத் திட்டத் தாக்கலைத் தொடர்ந்து, எதிர்வரும் நவம்பர் 24ஆம் தேதி வரை அதுது குறித்தவிவாதங்கள் சட்டமன்றத்தில் நடைபெறும் என்று சட்டமன்ற சபாநாயகர் லாவ் வேங் சான் கூறினார்.








