Dec 14, 2025
Thisaigal NewsYouTube
அனைத்துலக நிலையிலான  அங்கீகாரம்: பெண் அதிகாரமளித்தலில் மலேசியாவின் கல்வி மாதிரி!
தற்போதைய செய்திகள்

அனைத்துலக நிலையிலான அங்கீகாரம்: பெண் அதிகாரமளித்தலில் மலேசியாவின் கல்வி மாதிரி!

Share:

கூச்சிங், டிசம்பர்.14-

கல்வி, சமூக மேம்பாட்டின் மூலம் பெண்களை வலுப்படுத்துவதில் மலேசியா எடுத்துள்ள முன்னோடி அணுகுமுறை, துர்க்மெனிஸ்தானிக் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் உலக அரங்கில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்புமிக்க மாநாட்டில் மலேசியாவின் பங்கேற்பு, கல்வி, பொருளாதாரம், தலைமைப் பண்புகளில் பெண்கள் அதிகாரமளிக்கப் பயன்படுத்தப்படும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ள முக்கிய வாய்ப்பை வழங்கியதாக மகளிர், குடும்பம், சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோ ஶ்ரீ நான்சி ஷுக்ரி தெரிவித்தார்.

மலேசியாவின் முழுமையான சமூக மேம்பாட்டு மாதிரி - குறிப்பாகப் பொதுப் பல்கலைக்கழக மாணவர்களில் 60 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் பெண்கள் என்ற உண்மை - கல்வியில் பெண்களின் பங்கை வலுப்படுத்தும் அதன் அணுகுமுறைக்காக மற்ற நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த உலகளாவிய அங்கீகாரம், மலேசிய அரசாங்கத்தின் பெண்களுக்கான கொள்கைகள் சரியான திசையில் இருப்பதையும், நிலையான வளர்ச்சிக்கு மற்ற நாடுகளுக்கு ஒரு முன் மாதிரியாகச் செயல்படக்கூடிய ஆற்றலையும் நிரூபிப்பதாக நான்சி ஷுக்ரி குறிப்பிட்டார்.

Related News