திரெங்கானு,கெமாமான் நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தல் வரும் டிசம்பர் 2 ஆம் தேதி நடைபெறுகிறது என்று தேர்தல் ஆணையமான எஸ்பிஆர் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் நவம்பர் 18 ஆம் தேதியும் முன்கூட்டியே வாக்களிப்பு நவம்பர் 28 ஆம் தேதியும் நடைபெறும் என்று எஸ்பிஆர்தெரிவித்துள்ளது.
கெமாமான் இடைத் தேர்தலுக்கான தேதியை நிர்ணயிப்பதற்கு எஸ்பிஆர் தலைவர் தான் ஶ்ரீ அப்துல் கானி சாலே தலைமையில் இன்று காலையில் தேர்தல் ஆணையக் கூட்டம் புத்ராஜெயாவில் நடைபெற்றது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற நாட்டின் 15 ஆவது பொதுத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் போட்டியிட்ட பாஸ் கட்சி வேட்பாளரின் வெற்றி செல்லாது என்று தேர்தல் நீதிமன்றம் அறிவித்ததைத் தொடர்ந்து இடைத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் அந்த தொகுதி காலியானதாக எஸ்பிஆர் அறிவித்தது.








