வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியது தொடபாக ஒரு வழக்கில் தேடப்பட்டு வரும் சர்ச்சைக்குரிய சமயப் போதகர் ஜாஹிர் நாயக்கை ஒமானிலிருந்து நாடு கடத்தி கொண்டு வருவதற்கான முயற்சியில் இந்திய அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது.
தற்போது மலேசியாவில் அடைக்கலம் புகுந்துள்ள 56 வயதான ஜாஹிர் நாயக், மேற்காசிய நாடான ஒமானில், அந்நாட்டு அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று சமய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக இன்று மார்ச் 23 ஆம் தேதி தலைநகர் Muscat டிற்கு வருவார் என்று இந்திய மத்திய புலனாய்வுப்பிரிவு கண்டறிந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து ஒமானிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தி அழைத்து வருவதற்கான நடவடிக்கையை இந்தியாவின் மத்திய புலனாய்வுப்பிரிவு ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பாக ஓமான் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக இந்தியாவின் சட்ட நிபுணர்கள் தலைநகர் Muscat டிற்கு சென்றுள்ளனர். ஓமானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளும் அந்நாட்டு அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.








