Sep 27, 2026
Thisaigal NewsYouTube
காப்பகத்தில் சிறுவர்கள் சித்ரவதை: உரிமையாளர் மீது  குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

காப்பகத்தில் சிறுவர்கள் சித்ரவதை: உரிமையாளர் மீது குற்றச்சாட்டு

Share:

பத்துகேவ்ஸ், தாமான் செலாயாங் பெர்மாத்தாவில் உள்ள ஒரு காப்பகத்தில் 8 முதல் 17 வயதுக்குட்பட்ட நான்கு சிறுவர்களைத் துன்புறுத்தியதாகவும், உரிமம் இன்றி காப்பகத்தை நடத்தியதாகவும் அதன் உரிமையாளரான 31 வயது எஸ். வேலன் என்பவர் மீது இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.

செலயாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட வேலன், கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் 2025-ஆம் ஆண்டு வரை சிறார்களுக்கு எதிராக இத்தகைய கொடுமைகளை இழைத்து வந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

நீதிபதி நோராஸ்லின் ஒஸ்மான் முன்னிலையில் நிறுத்தப்பட்ட வேலன், தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியதைத் தொடர்ந்து அவர் 40 ஆயிரம் ரிங்கிட் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

ஜாமீன் காலத்தில் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களையோ அல்லது சாட்சிகளையோ வேலை தொடர்புகொள்ளக்கூடாது என்று நீதிபதி நினைவுறுத்தினார்.

வேலன், அந்த காப்பகத்தில் உள்ள சிறார்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை புரிந்ததாக ஏற்கனவே நான்கு பாலியல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்

காப்பகத்தில் சிறுவர்கள் சித்ரவதை: உரிமையாளர் மீது குற்றச... | Thisaigal News